உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 100 ஆடுகள் வெட்டி கோபாலபுரத்தில் பூஜை

100 ஆடுகள் வெட்டி கோபாலபுரத்தில் பூஜை

திருமங்கலம் : திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் முனியாண்டி கோயிலில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் ஒரு பிரிவினர் 54வது ஆண்டாக சாமி கும்பிட்டு வருகின்றனர்.இந்த ஆண்டும் பக்தர்கள் பால்குடம், தாம்பூலம் ஏந்தி ஊர்வலம் வந்தனர். சாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் 100 ஆடுகளை சாமிக்கு பலியிட்டு பூஜை செய்து அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் கொண்டல்சாமி, செயலாளர் தர்மராஜ், பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !