முத்துமாரியம்மன் கோவிலில் ஸ்தல சுத்தி பூஜை
ADDED :3230 days ago
ஊட்டி: ஊட்டி பிங்கர்போஸ்ட் சுவாமி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில், இன்று ஸ்தல சுத்தி பூஜை நடக்கிறது. தற்போது கோவில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், காலை, 9:00 மணி முதல் காலை, 10:30 மணி வரை, ஸ்தல சுத்தி பூஜை, சுதர்சன ஹோமம் ஆகியவை நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்து வருகின்றனர்.