உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர் பீடத்தில் தை பெருவிழா

சித்தர் பீடத்தில் தை பெருவிழா

ஊட்டி: ஊட்டி பிங்கர்போஸ்ட் தேவி கருமாரியம்மன் சித்தர் பீடத்தில் தை பெருவிழா நேற்று துவங்கியது. நேற்று அம்மனுக்கு திருகாப்பு அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. வரும், 20ம் தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் தேர்பவனி, அம்மன் அழைப்பு தோப்பன்லைன், மசினியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல், 1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 3:00 மணிக்கு சவுந்தர்ய லகரி பூஜா மண்டலியினரின் சிறப்பு வழபாடு, 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி, நிகும்பல மகா யாகம், மாலை, 3:00 மணிக்கு பராசக்தி மகளிர் மன்றத்தினரின் சிறப்பு பூஜை உட்பட பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !