உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் மங்கள வாத்தியம் வாசிப்போர் பணியிடம் காலி

பழநி கோயிலில் மங்கள வாத்தியம் வாசிப்போர் பணியிடம் காலி

பழநி, பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் வாசிப்பவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்படாததால் சிக்கல் நீடிக்கிறது. பழநி மலைக்கோயில், அதன் உபகோயில்களாக திருஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகியம்மன், மாரியம்மன், லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில்கள் உள்ளன. இங்கு மங்களவாத்தியங்களான நாதஸ்வரம், தவில், ஒத்து, தாளம் உள்ளிட்டவை வாசிக்கப்படுகிறது. இதற்காக 1998ம் ஆண்டு 17பேர் நியமனம் செய்யப்பட்டு கால பூஜைகளில் வாசித்துவந்தனர். இங்கு பல ஆண்டுகளாக உருவான காலிப்பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது. இதனால் விழாக்காலங்களை தவிர்த்து, பிறநாட்களில் ஆறுகாலபூஜையின்போது மங்கள வாத்தியங்கள் வாசிப்பது தடைபடுவதாக புகார் எழுந்துள்ளது. மங்கள வாத்தியகுழுவினர் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விஸ்வஇந்து பரிஷத் நகரசெயலாளர் செந்தில்குமார் கூறுகையில்,“ மங்கள வாத்தியகுழுவில் பத்துபேர் தான் உள்ளனர். இவர்கள் மலைக்கோயில், திருஆவினன்குடி ஆகிய இடங்களில் மங்கள வாத்தியங்களை வாசிக்கின்றனர். பிறகோயில்களில் வாசிப்பதுஇல்லை. பழநிகோயில் சார்பாக இயங்கும் நாதஸ்வர, தவில் இசைக் கல்லுாரியில் தேர்ச்சிபெறும் மாணவர்களை கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.”என்றார். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“இசைக்கல்லுாரி மாணவர்கள் மூலம் கோயில்களில் பூஜைநேரங்களில் மங்கள வாத்தியங்கள் வாசிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !