ஓம்சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3227 days ago
இடைப்பாடி: காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. இடைப்பாடி அருகே, மசையந்தெரு காட்டுவளவு, ஓம்சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வந்த புனிதநீரை, சிவாச்சாரியார்கள், கோபுர கலசங்கள் மீது ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில், மசையந்தெரு, இடைப்பாடி, வெள்ளாண்டி வலசு உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.