உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா

சின்னாளபட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா

சின்னாளபட்டி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன், வெண்ணைய் காப்பு, துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயில், சோமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையும், விளக்குப் பூஜையும் நடந்தது. பக்தர்கள் தேங்காய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !