ஆளவந்தீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED :3225 days ago
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா கோலாகலமாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் உடனமர் ஆரணவல்லியம்மன் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் லட்சார்ச்சனை விழா நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராமத்தினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர். மழை வேண்டி, உலக நன்மைக்காக லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.