உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலுார் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

பந்தலுார் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

பந்தலுார்: பந்தலுார் அருகே,கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில்  நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே, கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, கடந்த, 17ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து, சாமியார் மலையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி ஆசிரமத்தில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டு, பூஜை நடந்தது. பகல், 2:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, மாலை, 6:30 மணிக்கு,  முதல்கால வேள்வி ஆகியவை நடந்தது. 18ம்தேதி காலை,6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மங்கல இசை, 9:00மணிக்கு திருமஞ்சனம், 10:00மணிக்கு  இரண்டாம் கால வேள்வி, மதியம், 1:00மணிக்கு அன்னதானம், 6:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, 7:00மணிக்கு  மருந்து சாற்றுதல், அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

19ம்தேதி காலை, 7:00 மணிக்கு காப்பு அணிவித்தல், 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வி, மலர் வழிபாடு நடந்தது. காலை, 9:00மணிக்கு கோவை துறவியர்கள் மெய்கண்ட அடிகளார், அரங்கசாமி அடிகள், மரகதம் அம்மையார் தலைமையில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.  மாலை 6:00மணிக்கு தீபாரதனை, வானவேடிக்கை, நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிங்காரம், கமிட்டி தலைவர் தியாகராஜ், துணை தலைவர் கந்தசாமி, செயலாளர் கோவிந்தன்,பொருளாளர் அசோக், துணை செயலாளர் ராஜேந்திரன்,அர்ச்சகர் சக்திவேல் தலைமையில், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !