உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் குவிந்த பக்தர்கள்: மூன்று மணிநேரம் காத்திருப்பு

பழநியில் குவிந்த பக்தர்கள்: மூன்று மணிநேரம் காத்திருப்பு

பழநி: பழநி மலைக் கோயிலில் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசவிழாவையொட்டி பழநி ஞானதண்டயுதபாணிசுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறு விடுமுறையால் மலைக்கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். வெளிப்பிரகாரம் வரை வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் மூன்று மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். பாதவிநாயகர் கோயில், சன்னிதி வீதி, வடக்கு கிரி வீதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !