காரியசித்தி லட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3221 days ago
பழநி:பழநி அடிவாரம் ராமநாதநகரில் காரியசித்தி லட்சுமி நரசிம்மர் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதையொட்டி கடந்த ஜன.,21, 22ல் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், கும்பலங்காரம் முதற்கால கஜபூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.15மணிக்கு காரியசித்தி லட்சுமி நரசிம்மர், பரிவார தெய்வங்களின் கோபுர விமானத்தில் புனித கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் 9 அடி உயரமுள்ள அமிர்தவல்லி தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர், ஐயப்பன், கன்னிமூல கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பழநி ஆதினம் சாதுசண்முக அடிகளார் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.