உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் 4ம் ஆண்டு விழா

ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் 4ம் ஆண்டு விழா

திருப்பூர் : திருப்பூரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் நான்காம் ஆண்டு விழா நடந்தது. திருப்பூர், பி.என்., ரோடு, நெசவாளர் காலனியில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், நான்காம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலையில், மங்கள இசையுடன், ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, தீபாராதனை நடந்தது. மதியம், கலச அபிஷேகம், மஹா அலங்காரம், சதுர்வேத பாராயணம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கோவில் கமிட்டி நிர்வாகிகள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !