உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு புது மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு

ஈரோடு புது மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு

ஈரோடு: திருப்பாண்டி கொடுமுடி, புது மாரியம்மன் கோவில் குண்டம் விழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கொங்கேழு தலங்களில் ஒன்றானதும், மும்மூர்த்தி தலமுமான, திருப்பாண்டி கொடுமுடி, புது மாரியம்மன் கோவில் பூச்சூட்டு விழா நேற்று மாலை, பூச்சாட்டுதல், கம்பம் போடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ வழங்கி அம்மனை வழிபட்டனர். குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, 31ல் நடக்கிறது. இதற்காக, 60 குண்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. அதையடுத்து பொங்கல் வைத்தல், மகாபூஜை, வாணவேடிக்கை நடக்கிறது. பிப்.,3ல், இரவு புஷ்ப பல்லக்கு ஊர்வலத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !