மத்திய பிரதேச முதல்வர் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம்
ADDED :3213 days ago
ராமேஸ்வரம்;மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், புனித தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையான இன்று தரிசனம் செய்கிறார். இதற்காக ம.பி.,யில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். பின் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மண்டபத்தில் வந்திறங்கி, காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு பகல் 2 மணிக்கு ராமேஸ்வரம் வருகிறார். இங்கு ராமநாதசுவாமி, அம்மனை தரிசனம் செய்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில உளவுத்துறையினர் செய்துள்ளனர். இருப்பினும், ராமேஸ்வரத்தில் கடந்த இரு தினங்களாக மேகமூட்டத்துடன் சூறாவளி காற்று வீசுகிறது. இந்நிலை நீடித்தால் முதல்வர் பயண நேரத்தில் மாற்றம் ஏற்படும், என ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க., மாவட்ட தலைவர் முரளீதரன் தெரிவித்தார்.