வெள்ளிங்கிரி மலையில் தை அமாவாசை விழா கோலாகலம்!
ADDED :3211 days ago
கோவை : தை அமாவாசையை முன்னிட்டு சிவபெருமானை தரிசிக்க, வெள்ளிங்கிரி மலையில் ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். சுவாமி சிறப்பு அலலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று(ஜன.27ல்) தை அமாவாசை விழா வெள்ளிங்கிரி மலையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பூண்டி, வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலை உச்சியில் வீற்றிருக்கும் ஆண்டவரை சூரிய வழிபாடுடன் வணங்க காத்திருப்பது பெரும் பேறாக கருதுகின்றனர் பக்தர்கள். இதனால், இரவில் பயணம் செய்து அதிகாலை வரை மலையில் காத்திருப்பதை விரதமாக கருதுகின்றனர். கால் கடுக்கும் பயணத்தின்போது, கையில் கொண்டு செல்லும் மூங்கில் கம்புகளின் உதவி மிக முக்கியமானது. லட்சக்கணக்கான மூங்கில் கம்புகளை தேவஸ்தானமே தருவித்து, மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது.