உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் அத்யயன உற்சவம்!
ADDED :3213 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் அத்யயன உற்சவத்தை முன்னிட்டு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் ஒரே கேடயத்தில் அருள்பாலித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் அத்யயன உற்சவம் நடந்தது. விழாவின் 10ம் நாளில் காலை புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், கண்ணாடி அறையில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. மாலை ஊஞ்சலில் தாயார், பெருமாள் அருள்பாலித்தனர். விசேஷ பூஜைகள் நடந்தன. புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் ஒரே கேடயத்தில் அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.