உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமதேவர் சித்தர் 9ம் ஆண்டு குருபூஜை விழா!

ராமதேவர் சித்தர் 9ம் ஆண்டு குருபூஜை விழா!

மதுரை: மதுரை அழகர் கோவில் அழகர்மலை பகவான் ஸ்ரீராமதேவர் சித்தர் ஜீவசமாதி பீடத்தில் 12.3.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் பகவானின் ஜீவசமாதி பீடத்தில் ஸ்ரீராமதேவர் சித்தர் குருபூஜை 9ம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்: 11.3.2017 - சனிக்கிழமை, மாலை: 5.45 மணிக்கு, மாங்குளம் மண்டபம், அழகர்கோவில், மதுரை. 12.3.2017- ஞாயிற்றுக்கிழமை, காலை: 5.30 மணிக்கு- பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெறுதல் காலை: 6.30 மணிக்கு- மாங்குளம் மண்டபத்திலிருந்து, சாதுக்கள் மற்றும் அடியார்களுடன் மலைக்கு புறப்பாடு. காலை: 9.00 மணிக்கு- அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும், பகல்: 12.00 மணிக்கு- அழகர்கோவில் மாங்குளம் மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.

நாகப்பட்டினம், மகாலெட்சுமி நகர், ஸ்ரீசாய்பாபா திருக்கோவில், ஸ்ரீசாய்பாதம் மெய்யடிமை சுவாமிகளும்,  மானாமதுரை, வேதியனேந்தல் விலக்கு, ஸ்ரீமஹா பஞ்சமுக ப்ரத்தியங்கிராதேவி வேத தர்ம ஷேத்திரம், ஸ்ரீஞானசேகர சுவாமிகளும் கலந்து கொள்கிறார்கள் அத்துடன் மேலும் பல சாதுக்களும், ஆன்மீகப் பெரியோர்களும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.

தொடர்புக்கு: பகவான் ஸ்ரீராமதேவர் சித்தர் அறக்கட்டளை, 212, நாயக்கர் புதுத்தெரு, மதுரை- 652 001. மொபைல்: 99947 93888, 88839 83605, 95858 52305.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !