பவானி மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3210 days ago
பவானி: பவானி அருகே, மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பவானி, ஆப்பகூடல், சாத்தநாயக்கனூரில் உள்ள ஞானகணபதி, மஹா சக்தி மாரியம்மன் கோவிலில், கடந்த, 26ல், கணபதி பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. யாகசாலை அமைத்து பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாகுதி நடந்தது. காலை, 9:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.