ஆதிசக்தி விநாயகர் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3283 days ago
தாரமங்கலம்: தாரமங்கலம், 14வது வார்டு, முனியக்கவுண்டன்வளவில் உள்ள ஆதிசக்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. அதில், காவிரியில் இருந்து, பக்தர்கள் புனிதநீர் தீர்த்தக்குடங்கள் எடுத்து, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் இருந்து, விநாயகர் கோவிலுக்கு ஊர்வலம் சென்றனர். நேற்று காலை, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.