பாலையம்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3193 days ago
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி தர்ம சாஸ்தா கோயில் கும்பாபிஷேகம்
நடந்தது. கணபதி ஹோமம், புண்யாகவசனம், கும்ப கலச பூஜை, ஜீவ கலச பூஜை உட்பட
பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10:00 மணி கும்பாபிஷேகம் நடந்தது.
கோபுர கலசங்கள் புனித நீரால் அபிஷேகம் செய்ய,கோயில் உள்ள கன்னி மூல கணபதி,
தர்மசாஸ்தா, தட்சிணாமூர்த்தி, விஸ்ணு, பிரம்மா, மாளிகைபுரத்து அம்மன்,
கருத்த சுவாமி, கருப்பசாமி உள்ளிட்ட சுவாமி விக்கிரங்களுக்கு சிறப்பு
அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும்
வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாஸ்கர சாமி தலைமையில், குருநாதர்கள் ராமசாமி,
குருசாமி மற்றும் கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.