உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண விழா: சப்பர பவனி கோலாட்டம்!

நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண விழா: சப்பர பவனி கோலாட்டம்!

திருநெல்வேலி : ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் ரதவீதிகளில் சப்பர பவனியின் போது சிறுமிகள், பெண்கள் கோலாட்டம் அடித்து சென்றனர். நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு வேளைகளில் காந்திமதியம்பாள் சன்னதியில் இருந்து காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. காந்திமதியம்பாள் சப்பர பவனி நேற்று புறப்பட்ட போது பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் பாட்டுப்பாடி கோலாட்டம் அடித்தனர். 4 ரதவீதிகளிலும் கோலாட்ட வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 22ம் தேதியான நாளை இரவு 12 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு, டவுன் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். 24ம் தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !