பகவதியம்மன் கோவிலில் தை மாத சஷ்டி பூஜை
ADDED :3167 days ago
ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவிலில், முருகனுக்கு தை மாத சஷ்டியையொட்டி விசேஷ பூஜைகள் நடந்தன. தைமாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு நேற்று, சுல்தான்பேட்டை பகவதியம்மன்கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுக்கு, சிறப்பு விசேஷ பூஜைகள் நடந்தன. அதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சஷ்டி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.