உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவிலில் மத்வ நவமி ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் மத்வ நவமி ஆராதனை விழா

ஈரோடு: ராகவேந்திரர் கோவிலில், மத்வ நவமி ஆராதனை விழா நடந்தது. மத்வ மதத்தை துவக்கி வைத்த மத்வாச்சாரியார், 700 ஆண்டுகளுக்கு முன்பு உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், சிஷ்யர்களுக்கு உபநியாசம் செய்து கொண்டிருந்த போது, மறைந்தார். அவரின் நினைவு நாள், மத்வ நவமி ஆராதனை விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஈரோடு கருங்கல் பாளையம் காவிரிக்கரையில் உள்ள ராகவேந்திரர் கோவிலில், நேற்று மத்வ நவமி ஆராதனை விழா நடந்தது. உலகம் செழிக்க மழையும், மானுடம் செழிக்கவும், உலக அமைதி வேண்டியும், சிறப்பு யாக வேள்வி நடந்தது. ஈரோடு தாமோதாச்சார் தலைமையில் நடந்த வேள்வியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராகவேந்திரர் பிருந்தாவனத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பவானி குருபிரசாத் ஆச்சாரின் சிறப்பு சொற்பொழிவு, ராத்திரி சத்திரத்தில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அறங்காவலர்கள், குப்புலட்சுமி, குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !