சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
ADDED :3170 days ago
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவின் முதல்நாளான நேற்று முன்தினம், சுவாமி நிலத்தில் புற்று மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 11:20மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து, மாலையில் ஆட்டுக்கிடா வாகன உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழா, 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. தினசரி சுவாமி அலங்காரம் செய்து மாலையில் வீதி உலா நடக்க உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்வான, பெண்களால் மட்டுமே வடம் பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி, வரும், 9ல் நடக்க உள்ளது.