உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருடன் சுமந்த பால்கட்டி

கருடன் சுமந்த பால்கட்டி

ஒருமுறை வால்கில்யர் என்னும் மகரிஷியைக் கண்டு தேவேந்திரன் பரிகாசம் செய்தான். இந்திரனின் கர்வத்தைப் போக்க ஒருவனை உண்டாக்கவேண்டும் என்று அவர் வேள்வி செய்தார். அவ்வேள்வியின் பயனாக காஷ்யபருக்குப் பிறந்த மைந்தனே கருடன். தாயின் பெயரைக் குறிப்பிடும்விதத்தில் வைநதேயன் என்ற சிறப்புப் பெயரும் இவருக்குண்டு. கருடனின் வலிமையை கண்ட மகாவிஷ்ணு, தன்னுடைய வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருப்பதி மலையை பூலோகத்திற்குக் கொண்டு வந்த பெருமை கருடனையே சேரும். துவாரகை மன்னனான கண்ணன், புத்திரபேறுக்காக உபமன்யு முனிவரிடம் தீட்சைபெற்று தவமிருந்தார். அப்போது துவாரகாபுரியைக் காக்கும் பணிக்கு கருடனையே நியமித்தார். ஒருமுறை பாற்கடலில் உள்ள சுவேதத்தீவில் இருந்த பால் கட்டிகளை, தன் பிடரியில் சுமந்து வந்தான் கருடன். அவை பூலோகத்தில் சிதறின. அவையே சுவேத மிருத்திகையாக (நாமம் இடும் திருமண்) மாறியதாகச் சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !