உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடித்தபசு அம்மன்

ஆடித்தபசு அம்மன்

அரியும் சிவனும் ஒன்றே என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திய திருத்தலம் சங்கரன்கோவில். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இங்கு அம்பிகை கோமதி என்னும் திருநாமத்தோடு அருள்புரிகிறாள். சங்கன், பதுமன் என்னும் இரு மன்னர்கள் சிவ, விஷ்ணுவில் யார் உயர்ந்தவர் என்பதை உலகிற்கு அறிவிக்கும்படி வேண்டி நின்றனர். அவர்களின் அறியாமையை போக்க அம்பிகையே தவத்தில் ஆழ்ந்தாள். தவப்பயனாக, சிவவிஷ்ணு இருவரும் சரிபாதியாக இணைந்து சங்கரநாராயணராக காட்சியளித்தார். இவ்விழா 12 நாட்கள் சங்கரன் கோவிலில் நடக்கிறது. விழாவின் கடைசிநாளான ஆடித்தபசு ஆகஸ்ட் 11ல் நடைபெறும். அன்று விபூதிப் பையுடன் கோமதியம்மன் ஒற்றைக் காலை ஊன்றி தபசுமண்டபத்தில் தவமிருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் காட்சியருள்வார். பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த விளைபொருட்களை கோமதியம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !