பூஜை அறையை எப்படி வைக்க வேண்டும்?
ADDED :5499 days ago
திசைகளில் வடகிழக்கும், தென்மேற்கும் தெய்வீகம் நிறைந்தவை. வடகிழக்குத் திசையை ஈசான்யமூலை என்றும், தென்மேற்குத் திசையை கன்னிமூலை என்றும் குறிப்பிடுவர். இம்மூலைகளில் பூஜையறை அமைப்பது நல்லது. பூஜை அறையின் வாசல், கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்க வேண்டும். விநாயகர், லட்சுமி, சரஸ்வதி மூவரும் பூஜையறையில் இடம்பெறுவது அவசியம். பிரதான இடத்தில் உங்களின் இஷ்டதெய்வத்தை வைத்து வழிபடுங்கள்.