மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரில் யார் சிறந்தவர்!
ADDED :5499 days ago
வாழ்வின் உயர்வுக்கு இந்த நால்வருமே படிக்கட்டுகளாக இருந்து நம்மை உயர்த்தி விடுகிறார்கள். அனைவரும் முக்கியம் தான். இருந்தாலும், பண்புகளில் உயர்ந்தது அன்பு தான். அன்பின் வெளிப்பாடாக இருப்பவள் அம்மா தான். பாலூட்டிச் சீராட்டி வளர்த்தவள். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்று அவ்வைப் பாட்டியும் இதைத் தான் குறிப்பிடுகிறார்.