துர்க்கை அம்மனுக்கு 108 விளக்கு பூஜை
ADDED :3362 days ago
கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தில் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு லட்சுமி நாராயண பெருமாள், துர்க்கையம்மனுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, உலக நன்மை வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டியும், வரதராஜன் பட்டாச்சாரியார் தலைமையில், 108 பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை மற்றும் குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இதையொட்டி லட்சுமி நரசிம்மர், துர்க்கையம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.