மயிலம் கோவிலில் நாளை தைபூச விழா
ADDED :3293 days ago
மயிலம்: மயிலம் கோவிலில் நாளை தை பூச விழா நடக்கிறது. மயிலம் வள்ளி, தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில், நாளை காலை 6:00 மணிக்கு தை பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பால், பன்னீர், புஷ்ப காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் காவடிகளை சுமந்து, சன்னதி வீதி வழியாக மலைக் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். காலை 11:30 மணிக்கு தீமிதி விழாவும், பகல் 12:00 மணிக்கு பால் அபிஷேகமும் நடக்கிறது. பின்னர், மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். இரவு 1008 சங்கு அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.