உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூசம் திருவிழா - துளிகள்!

தைப்பூசம் திருவிழா - துளிகள்!

மலர் போல் மலரட்டும்: முருகன் சிவந்தமேனியுடன், கையில் வேல் தாங்கியிருப்பார். வலதுபக்கம் வள்ளியும், இடப்புறம் தெய்வானையும் காட்சி யளிப்பர். சூரியன் முருகனின் வலக்கண்ணாகவும், சந்திரன் இடக்கண்ணாகவும் உள்ளது. சூரியனைக் கண்டு தாமரை மலரும். சந்திரனைக் கண்டு     நீலோத்பலம் என்னும் குமுதமலர் மலரும்.     அதனால், சித்திரம் தீட்டும்போது வலப்புறம் இருக்கும் வள்ளிக்கு        தாமரையும், இடப்புறம் இருக்கும்  தெய்வானைக்கு குமுத மலரும்          வரைய வேண்டும். முருகனின் பார்வையால் இம்மலர்கள் மலர்வதைப் போல பக்தர்களின் வாழ்வும், எப்÷ பாதும் மலர்ந்திருக்கும்.  

முருகா என்றழைக்கவா:
தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது.  மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை அதன் பின் அமைத்து உண்டான பெயர் முருகு. முருகா என்ற பெயருக்கு தெய் வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்கள் உண்டு. முருகனின் பெயர்களில் முருகன், குமரன், குகன் ஆகிய  மூன்றும் சிறப்பு மிக்கவை. இதனை அருணகிரிநாதர், முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்,  என்று கந்தரநுபூதியில் குறிப்பிட்டுள்ளார். முருகா என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகிச் சொன்னாலும் இனிமையான வாழ்வு  அமையும்.

குழந்தைகளுக்கான ஆயுதம்: தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு இடும் வழக்கம் இல்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று  யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால், முருகனின் வெற்றி வேலைச் சிறப்பிக்கும் விதத்தில், வெற்றிவேல், கதிர் வேல், தங்கவேல், சக்தி÷ வல்,வடிவேல், முத்துவேல், வேலாயுதம் என்று பெயரிடுகிறார்கள். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் முருகனை வணங்கும் போது, திரு க்கைவேல் போற்றி போற்றி! என்று ஒருமுறைக்கு இருமுறை போற்றுகிறார். முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதைப் போல வேலுக்கும் ஆறு முக ங்கள் உண்டு.

மகாபாரதத்தில் கந்தன்:
வனவாசம் சென்ற தர்மரிடம், மார்க்கண்டேய மகரிஷி கந்தப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைத்தார். சிவபார்வதி,  அக்னி, கங்கை, கார்த்திகைப்பெண்கள், இந்திராதிதேவர்கள் ஆகியோருக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பை அதில் விளக்குகிறார். மகாபாரத  வனபர்வத்தின் கடைசி அத்தியாயத்தில் கந்தனின் திருநாமங்கள், துதிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கந்தனின் பெருமைகளைக் குறிப்பிடும் பத்து  அத்தியாயங்கள் அதில் உள்ளன. மூவுலகத்திலும் புகழ் பெற்ற கந்தனுக்கு இந்திரன், தன் பதவியை வழங்கினான். ஆனால், கந்தன் பெருந்தன்மை÷ யாடு இந்திர  பதவியை ஏற்கவில்லை. தேவர்களின் சேனாதிபதியாக பதவியேற்றதால், கந்தனுக்கு தேவசேனாபதி என்ற பெயர் ஏற்பட்டது.

வெற்றி நகரில் தைப்பூசம்: தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த தலம் திருச்செந்தூர். முருகன் தன்  படையுடன் வந்து தங்கியதால் ஏற்பட்ட பெயரே படைவீடு. மற்ற முருகன் தலங்களை படைவீடு என்று குறிப்பிட்டாலும் திருச்செந்தூருக்கே அது  பொருந்தும். தேவதச்சனான விஸ்வகர்மா மூலம் படைவீடு அமைத்து தங்கிய முருகன், தேவகுருவாகிய வியாழபகவான் மூலம் அசுரர்களின்  வரலாற்றை அறிந்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது.  திருச்செந்தூர் என்பதற்கு புனிதமும் வளமும் பொருந்திய வெற்றிநகரம் என பொருள்.  தைப்பூசத்தன்று இங்கு சிறப்பு பூஜை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !