உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ராக்கு பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

நல்ராக்கு பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கம்பம், கம்பம் நல்ராக்குப் பெருமாள் கோயிலில் பிப். 6ல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவங்கியது. மாலை 4 மணிக்கு பெட்டி கோயில் வீட்டிலிருந்து தீர்த்தக்குடங்களுடன், விமான கலசம் மற்றும் சுவாமி புறப்பாட்டுடன் கோயிலிற்கு கொண்டு வரப்பட்டது. மறுநாள் இரண்டாம் கால வேதியர் அர்ச்சனை, சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, விசேஷ ஹோமம், தீபாராதனையுடன் இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பெருமாள் - தாயார்களுக்கு அலங்கார திருமஞ்சனம், மூன்றாம் கால அர்ச்சனை சிறப்பு ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை கோ பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. கடம் புறப்பாடு, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க வேதவிற்பன்னர்கள், கலசங்களின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இது பட்டர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது. வானில் கருடன் வட்டமிட்டது கண்டு, பக்தர்களின் நாராயணா நாராயணா என்ற கோஷம் விண்ணைப்பிளந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சந்தனக்குமார், நகராட்சி முன்னாள் உறுப்பினர் தங்கராஜ், பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பூஜாரி அரசன் உள்ளிட்ட கும்பிடுகுடி பங்காளிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !