பழநியில் தைப்பூச கோலாகலம்: 3000 கிலோ பூக்களால் அலங்காரம்
ADDED :3251 days ago
பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயில் உட்பிரகாரம் பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட மூவாயிரம் கிலோ பல வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று பழநி புஷ்ப கைங்கர்யா சபா சார்பில் மலைக்கோயில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபத்தில் பெங்களூரு, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மஞ்சள், பிங்க், ரோஸ் உட்பட பலவண்ண ரோஜாபூக்கள் மற்றும் பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டது. இவற்றுடன் திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து வந்த செவ்வந்தி, மல்லிகை, ரோஜா பூக்களாலும் மலைக்கோயில் உட் பிரகாரத்தில் வேல், ஓம் சரவண பவ என பூக்களாலான ரங்கோலியும் வரையப்பட்டிருந்தது.