உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லம்மனுக்கு நாளை பாலபிஷேகம்

எல்லம்மனுக்கு நாளை பாலபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: எல்லம்மனுக்கு, 108 பால்குடங்கள், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, நாளை காலை அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலையில், அம்மன் வீதியுலா எழுந்தருளுகிறார். ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் கிராமத்தில், 2014ல், எல்லம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. மூன்றாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, நாளை, அம்மனுக்கு சிறப்பு உற்சவம் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, செவிண்டியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, பால்குட ஊர்வலம் துவங்குகிறது. பகல், 11:00 மணிக்கு, எல்லம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். மாலை, 4:00 மணிக்கு, பெண்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு படைக்கின்றனர். இரவு 7:00 மணிக்கு, எல்லம்மன் வீதியுலா எருந்தருளுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !