உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வராக, பன்னீர் செல்வம் தொடர எம்.எல்.ஏ., பழநியில் தரிசனம்

முதல்வராக, பன்னீர் செல்வம் தொடர எம்.எல்.ஏ., பழநியில் தரிசனம்

கோவை: முதல்வராக, பன்னீர் செல்வம் தொடர வேண்டும் என்ற வேண்டு தலுடன், எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, பழநி முருகனை தரிசித்தார். கோவை, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இவர், நேற்று காலை, பழநி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என, தரிசனம் செய்ததாக கூறினார். பின், கோவையில் இருந்து, விமானம் மூலம் சென்னை கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !