உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமானுஜரின் வைணவ மாநாடு இரும்புலியில் கோலாகலம்

ஸ்ரீராமானுஜரின் வைணவ மாநாடு இரும்புலியில் கோலாகலம்

காஞ்சிபுரம்: அச்சிறுப்பாக்கம் அடுத்த இரும்புலி கிராமத்தில், ஸ்ரீராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு வைணவ மாநாடு நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த இரும்புலி கிராமத்தில் ஸ்ரீ வேணுநாதப் பிரிய நவநீத கண்ணன் பக்த பஜனை சபை உள்ளது. இங்கு, ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு, முதல் வைணவ மாநாடு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஸ்ரீராமானுஜரின் சிறப்புகள் குறித்து பக்தர்களிடம் எடுத்து கூறப்பட்டது. காலை, 7:00 மணிக்கு, பஜனை கோஷ்டிகளுடன், ராமானுஜர் திருவீயுலா நடைபெற்றது. இதையடுத்து, 8:45க்கு கருட கொடியேற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து, திருமால் துதி, வரவேற்புரை, ஆண்டறிக்கை வாசித்தல் போன்றவை நடைபெற்றன. ஸ்ரீராமானுஜரின் பெருமைகளை கலை நிகழ்ச்சி நடனம் மூலம் வெளிபடுத்தியது, பக்தர்களியே வரவேற்பை பெற்றது. ஸ்ரீ ராமானுஜரை பற்றிய சொற்பொழிவு கள் முடிந்து பகல், 1:00 மணிக்கு மாநாடு முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !