எல்லம்மனுக்கு பாலாபிஷேகம்
ADDED :3158 days ago
ஆர்.கே.பேட்டை: கும்பாபிஷேகம் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி, எல்லம்மனுக்கு நேற்று பால் குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டன. மாலையில் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுாரில், கடந்த 2014ல், அன்னியம்மன் கோவில் கட்டப்பட்டது. மூன்றாண்டுகள் நிறைவை ஒட்டி, நேற்று, அம்மனுக்கு சிறப்பு உற்சவம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, செவிண்டியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, 108 பால் குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. 11:00 மணிக்கு, மூலவர் எல்லம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. 12:00 மணிக்கு, எல்லம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மாலை 3:00 மணியளவில், கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்தனர். இரவு 7:00 மணிக்கு. உற்சவர் வீதியுலா எழுந்தருளினார்.