செம்பொற்சோதிநாதர் கோவிலில் சைவப்பாட வகுப்பு துவக்கம்
ADDED :3158 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் சைவப்பாட வகுப்புகள் துவங்கியது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில், இலவச சைவப்பாட வகுப்புகள் துவங்கியது. கோவை மணி வாசகர் அருட்பணி மன்ற பேராசிரியர் பெங்களுரூ நீலமேகம் சைவப்பாட வகுப்புகளை நடத்தினார். கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசு திருமடம் நாச்சியப்பன் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறார். கோவை சைவ நெறியாளர் சென்னியப்பனார் வகுத்துக் கொடுத்த உண்மை விளக்கம், திருவருட்பயன், சிவப்பிரகாசம், சிவஞான பேதம், சைவ சித்தாந்த சாத்திரங்கள், தமிழ்வழி வாழ்வியல் சடங்குகள், வழிபாடுகள் குறித்து பாடம் நடத்தப்படுகிறது.