கரியபெருமாள் கோவிலில் வரும் 17ல் கும்பாபிஷேகம்
இடைப்பாடி: பைரவ கரியபெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும், 17ல் நடக்கிறது. இடைப்பாடி அடுத்த, வெள்ளாளபுரம் கிராமம், சின்னபணிக்கனூரில், பைரவ கரியபெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 11ல், சுபமுகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. வரும், 15 மாலை, 4:00 மணியளவில், முளைப்பாலிகை ஊர்வலம், இரவு, 9:30க்கு, முதல் கால யாக பூஜை நடக்கிறது. பிப்., 16 காலை, 6:00 மணிக்கு சுப்ரபாதம், காலை, 9:30க்கு மேல் இரண்டாம் கால யாகம், மாலை, 4:30க்கு மேல் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 17 அதிகாலை, 5:00 மணிக்குமேல் சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி, காலை, 8:00 மணிக்கு மேல் யாக சாலை, வைகுண்டலத்தில் இருந்து கடங்கள் புறப்பாடு சென்று, கும்பாபி?ஷகம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு, பொது விருந்து, மாலை, 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, 18ல், சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.