உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 17ல் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 17ல் கும்பாபிஷேகம்

திருத்தணி: முத்துமாரியம்மன் கோவிலின், மகா கும்பாபிஷேகம், வரும், 17ல் நடைபெறுகிறது. திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள வல்லரசுநகரில், 12 ஆண்டுகளுக்கு முன், முத்துமாரியம்மன் கோவில் புதியதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், கும்பாபிஷேகம் முடிந்து, 12 ஆண்டுகள் ஆனதால் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி வாசிகள் தீர்மானித்து, கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து, வரும் 17ல், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 51 கலசங்கள் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்தன. வரும், 17ல், காலை, 8:00 மணிக்கு கலச ஊர்வலம் மற்றும் காலை, 9:00 மணிக்கு கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கும். அதற்கு முன்னதாக பால்குட ஊர்வலம் நடைபெறும். மாலையில் ஆன்மிக சொற்பொழிவும், அம்மன் பக்தி பாடல்கள் பாடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !