உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

புத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

ஆட்டையாம்பட்டி: புத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். ஆட்டையாம்பட்டி, புத்துமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 6ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம், பவானி ஆற்றில் இருந்து, புனிதநீர் எடுத்துக்கொண்டு, ஏராளமான பக்தர்கள், மேள, தாளம் முழங்க, தீர்த்தக்குட ஊர்வலம் சென்றனர். நேற்று காலை, 6:00 மணி முதல், பொங்கல் வைத்தல் துவங்கியது. அதில், நைனாம்பட்டி, ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள், பொங்கல் வைத்து, புத்துமாரியம்மனை வழிபட்டனர். இதையொட்டி, மூலவர் புத்து மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில், அம்மன் திருவீதி உலா வந்தார். ஏற்பாடுகளை, ராஜகணபதி கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள், புத்து மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !