உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி மாத பொங்கல் விழா: பவானியில் இன்று பூச்சாட்டு

மாசி மாத பொங்கல் விழா: பவானியில் இன்று பூச்சாட்டு

பவானி: பவானி செல்லியாண்டியம்மன் - மாரியம்மன் கோவில்களில், மாசி மாத பொங்கல் திருவிழா, பூச்சாட்டுதலுடன் இன்று துவங்குகிறது. பவானி நகர காவல் தெய்வமான செல்லியாண்டியம்மன் - மாரியம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், மாசி மாதத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, இன்று இரவு, 8:00 மணியளவில், செல்லியாண்டியம்மன் - மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. வரும், 21ல், கம்பம் நடுதல், 22ல் கொடியேற்றம், 28ல் அம்மனுக்கு நீராட்டு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல், பொங்கல் வைபவம், மார்ச், 1ல் நடக்கிறது. மார்ச், 2ல் தேரோட்டம், 3ல் பரிவேட்டை, 4ல் தெப்ப உற்சவம் நடக்கிறது. மார்ச், 5ல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !