உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லிமலையில் மழை வேண்டி பாரம்பரிய பூஜை

கொல்லிமலையில் மழை வேண்டி பாரம்பரிய பூஜை

ஊட்டி : ஊட்டி அருகே, கொல்லிமலையில் வசிக்கும் கோத்தர் இன மக்கள், மழை வேண்டி, பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தனர். ஊட்டி அருகே, கொல்லிமலையில் வசிக்கும் கோத்தர் இன மக்கள், மழை வேண்டி, தங்களின் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தனர். தங்கள் பகுதியில் உள்ள, கொல்காட் என்ற இடத்தில் உள்ள இயற்கை நீரூற்றில், கடந்த வாரம், காணிக்கை செலுத்தி, வருணபகவானுக்கு பூஜை செய்தனர். நேற்று, சுத்தமான அந்த இயற்கை நீரூற்றில் இருந்து கிடைக்கும் நீரை, மண் குடங்களில் எடுத்து வந்த கோத்தரின பெண்கள், கொல்லிமலையில், தங்கள் கோவிலை சுற்றியுள்ள மரங்களுக்கு ஊற்றி, வேண்டுதலை நிறைவேற்றினர். கோத்தர் இன மக்கள், தங்களின் பாரம்பரிய உடையணிந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் கூறுகையில்,மழை பெய்து, வறட்சி நீங்கி, விவசாயம் செழிக்க வேண்டும்; நீர் வளம் பெருக வேண்டும்; இயற்கை வளம் காக்கப்பட வேண்டும். மக்கள் வளம் பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இந்த பூஜையை செய்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !