முத்தப்பன் சமிதியின் திருவப்பன திருவிழா
குன்னுார் : அருவங்காடு முத்தப்பன் பக்தஜன சமிதியின், 9வது ஆண்டு முத்தப்பன் திருவப்பன திருவிழா வரும், 18, 19ம் தேதிகளில் நடக்கிறது. குன்னுார் அருகேயுள்ள, அருவங்காடு செட்டியார் காலனி, கலைமகள் சந்திப்பில், முத்தப்பன் பக்தஜன சமிதியின் சார்பில், ஆண்டுதோறும் திருவப்பன திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான, 9வது ஆண்டு திருவிழா வரும் 18ம் தேதி துவங்குகிறது. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 11:30 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றுதல், பகல் 12:00 மணிக்கு முத்தப்பன் மலையிறக்கல், கலசாட்டம், 12:45 மணிக்கு அன்னதானம், 1:30 மணிக்கு முத்தப்பன் வெள்ளாட்டம், மதியம், 2:30 மணிக்கு பள்ளிவேட்டை, பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்குதல், 4:30 மணிக்கு தாளப்பொலி, வேளஞ்சேரி தேவகலா கலாலய குழுவினரின் பிரசன்ன இரவு, 9:00 மணிக்கு கலசம் எழுந்தருளல் ஆகியவை நடக்கின்றன. 19ம் தேதி முத்தப்பன் திருவப்பன திருமுடி சார்த்தல், காலை, 11:30 மணிக்கு பள்ளிவேட்டை, அருள் வாக்கு வழங்குதல், பகல் 12:30 மணிக்கு அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு தீபாராதனை, இரவு, 9:00 மணிக்கு பய்யம்குட்டி முத்தப்பன் திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முத்தப்பன் திருவப்பன மகோற்சவ விழா கமிட்டி முதன்மை நிர்வாகி ஜெயப்பிரகாஷ் தலைவர் கங்காதரன், பொது செயலாளர் மது உட்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.