உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலங்கியம்மன் கோவில் சுற்றுச்சுவர் எதிர்பார்ப்பு

வலங்கியம்மன் கோவில் சுற்றுச்சுவர் எதிர்பார்ப்பு

கரூர்: கரூர், ரயில்வே ஸ்டேஷன் அருகே பழமை வாய்ந்த வலங்கி யம்மன் கோவிலுக்கு, சுற்றுச்சுவர் இல்லாததால், பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் பக்தர்கள் கூறியதாவது: வலங்கியம்மன் கோவிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால், கோவிலைச் சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோத கும்பல் இங்கு வந்து அமர்ந்து கொள்கின்றனர். இதனால், சுவாமியை தரிசிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இரவு நேரங்களில் கோவில் நிலம் காலியாக கிடப்பதால் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார். இதுகுறித்து, கோவில்கள் வகையறா மற்றும் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் கூறுகையில், வலங்கியம்மன் கோவில் உற்சவம் வரும், 22ல் நடக்கிறது. வஞ்சியம்மன் கோவில் உற்சவம் மார்ச், 1ல் நடக்கிறது. மாவடி ராமசாமி கோவில் உற்சவம், மார்ச், 8ல் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !