தீர்ப்பை முன்கூட்டியே உணர்த்திய சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி
திருப்பூர்: சசிகலா வழக்கில் வெளியான தீர்ப்பை, முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான், சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி யில், இரும்பு சங்கிலி வைத்து பூஜிக்கப்பட்ட தாக, பக்தர்கள் கருதுகின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை யில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
பழமை வாய்ந்த இக்கோவிலின் சிறப்பு அம்சமாக, ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. ஏதாவது, ஒரு பக்தரின் கனவில் தோன்றும் சிவன் மலை ஆண்டவர், குறிப்பிட்ட பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து, பூஜிக்கு மாறு கட்டளையிடுவார். உத்தரவு கிடைத்தபக்தர், கோவிலுக்கு வந்து சொன்னால், அதை உறுதி செய்ய, ஆண்டவனிடம் பூ கேட்டு அனுமதி பெற்று, அதன்பின், உத்தரவு பொருள் பெட்டியில் வைக்கப்படும். அந்த பொருள், அடுத்த உத்தரவு வரும் வரை, பெட்டி யில் இருக்கும். அந்த பொருள் தொடர்பான ஏதாவது ஒரு தாக்கம் ஏற்படுவதாக, பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.ஆண்டவன் உத்தரவு பெட்டியில், துப்பாக்கிவைத்த போது, சீனா போர், நீர் வைத்து பூஜித்த போது, சுனாமி என, பல்வேறு சம்பவங்களை பக்தர்கள் பட்டியலிடுகின்றனர்.
ஜன., 10 முதல், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, சசிகலா உள்ளிட்டோ ருக்கு, சிறை தண்டனையை உறுதி செய்து,சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை, முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான், சிவன்மலை ஆண்டவர், இரும்பு சங்கிலி வைத்து பூஜிக்க உத்தரவிட்ட தாக கருதி, பக்தர்கள் பரவசமடைந்து உள்ளனர்.