ஆதியோகி ரத யாத்திரைக்கு வரவேற்பு
ADDED :3155 days ago
பவானி: பவானிக்கு வந்த, ஆதியோகி சிலை மாதிரி, ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை ஈஷா யோக மையத்தின் சார்பில், வெள்ளியங்கிரி மலைச்சாரல் பகுதியில், 112 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலை, வரும், 24ல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதை, தமிழகம் முழுவதும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், ரதயாத்திரை பயணம் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து, ஈரோடு மாவட்டம், பவானி நகருக்கு ரதயாத்திரை வாகனம், நேற்று மாலை, 5:30 மணிக்கு வந்தது. பவானி - அந்தியூர் பிரிவு ரோட்டில், சிறப்பு பூஜை நடத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மேட்டூர் மெயின் ரோடு வழியாக, கூடுதுறை வரை ஊர்வலமாக சென்று, அங்கிருந்து கோபிக்கு யாத்திரை சென்றது.