உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ராசிபுரம்: புதுச்சத்திரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 17ல் நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, புதுச்சத்திரம் விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 17ல், நடக்கிறது. இதை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமம், துர்கா லட்சுமி சரஸ்வதி ஹோமம் நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு, யாகசாலை பிரவேசம் நடைபெறுகிறது. வரும், 17 காலை, 4:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !