பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா நாளை துவக்கம்
பழநி: பழநி மாரியம்மன்கோயில் மாசித்திருவிழா நாளை (பிப்.,17ல்) இரவு முகூர்த்தகால் நாட்டுதலுடன் துவங்குகிறது. பழநி கிழக்குரத வீதியுள்ள மாரியம்மன்கோயில் மாசிதிருவிழா பிப்.,17ல் முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கி மார்ச் 9 வரைநடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் பிப்.,21ல் நடக்கிறது. கம்பத்திற்கு புனிதநீர், பால் ஊற்றியும், அக்னிச்சட்டிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பிப்.,28 செவ்வாய் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் (தீச்சட்டிஎடுத்தல்) அம்மன் தங்கமயில் வாகனத்தில் உலாவருதல் நடக்கிறது. மார்ச் 7ல் இரவு 7.30 மணிக்குமேல் திருக்கல்யாணமும், மார்ச் 8ல் மாலை 4.30மணிக்குமேல் திருத்தேரோட்டம் நடக்கிறது. விழாநாட்களில் அம்மன் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.