உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிவராத்திரி விழா

ராசிபுரம், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிவராத்திரி விழா

ராசிபுரம்: ராசிபுரம், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, மஹா சிவராத்திரி உற்சவ திருவிழா, இன்று முதல், மார்ச், 2 நடக்கிறது. இதை முன்னிட்டு, வரும், 25 இரவு, 7:00 மணிக்கு, அக்னி குண்டம் பற்றவைத்தல் நடக்கிறது. மறுநாள் காலை, 7:00 மணிக்கு, பூ மிதித்தல்; 27 இரவு, 7:00 சுவாமி ரத ஊர்வலம்; 28 மாலை 4:00மணிக்கு, கோவிலிலிருந்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிங்க வாகனத்தில் முத்துக்காளிப்பட்டி மயானத்தில் மயான கொள்ளை நடக்கிறது. மார்ச், 1 இரவு, 7:00 மணியளவில், சத்தாபரணம்; 2ல் மஞ்சள் நீராடலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !