மாசி திருவிழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்
நெத்திமேடு: தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் மாசி திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. சேலம், நெத்திமேடு, தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் மாசி திருவிழா, சக்தி அழைத்தலை தொடர்ந்து, பூச்சாட்டுதலுடன், நேற்று முன்தினம் இரவு துவங்கியது. இதில், திரளான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். பிப்., 19 மதியம், அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, திருவிளக்கு பூஜை நடக்கிறது. பிப்., 21, நெத்திமேடு குமாரகவுண்டர் தெருவில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் வந்து, சுவாமிக்கு, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பிப்., 22 காலை, சக்தி அழைத்தல், பொங்கல் மஹா பூஜை, பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல், புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. பிப்., 23ல் சத்தாபரணம், பிப்., 24ல் மஞ்சள் நீராட்டம், பிப்., 25ல் மறுபூஜை ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்துள்ளனர்.